11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (07:59 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்