மது கிடைக்காததால் கிணற்றில் குதித்த நபர் – சென்னையில் நடந்த களேபரம் !

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (15:12 IST)
சென்னை ஆவடியை அடுத்த பகுதியில் மதுவுக்கு அடிமையான நபர் ஒருவர் குடிக்க மது இல்லாததால் கிணற்றில் குதித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்த அந்த கூலித் தொழிலாளி தினமும் மதுக் குடித்து அதற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அவர் சரக்குக் கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து சரக்குக் கிடைக்காத விரக்தியில் அவர் வீட்டுக்கு அருகே யுள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

அந்த கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானப்படுத்த முயல கீழே யாராவது வந்தால் தான் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து வாளியில் வைத்து அவருக்கு மது அனுப்பப்பட்ட பின்னர் மேலே வந்துள்ளார். மேலே வந்து இன்னும் சரக்கு வேண்டும் என அடம்பிடித்து மறுபடியும் கிணற்றுக்குள் குதிக்க தீயணைப்புத் துறைக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து அவர்கள் வந்து சமாதானப்படுத்தி அவரை மீட்டுள்ளனர். அவர் மேல் வழக்குகள் எதுவும் பதியாமல் விட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்