தமிழகத்தில் மீண்டும் மழை - வானிலை மையம் புதிய தகவல்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (12:56 IST)
இன்று சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால், நேற்று பெரிதாக மழை இல்லை. பல இடங்களில் வெயில் அடித்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
வங்கக்கடலில் ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிலந்து விட்டது. ஆனால், இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
குறிப்பாக தென் தமிழகம், டெல்டா, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். அதேபோல், வரும் சில நாட்களில் மழை படிப்படியாக குறையும் என அவர் தெரிவித்தார்.
 
மேலும், வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செ.மீ. க்கு பதில் 1 செ. மீ. குறைந்து 22 செ.மீ வரை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்