துன்பம் என்னும் யாழ் சென்னையை சூழ்ந்து உள்ளது. முன்னேற்பாடுகள் இல்லாத ஒரு அரசு, தனது மக்களை மீண்டும் தெருவில் நிறுத்தி இருக்கிறது. மரணம் என்னும் தூது வந்தது கொடுக்கையூரில் இரு தளிர்களுக்கு அது அரசின் வடிவில் வந்தது. இந்த ஆட்சியாளர்களால், சாமானிய மக்கள் வசிக்கவே முடியாத இடமாய் மாற்றப்பட்டுவிட்டது சென்னை.
பிரச்சனை பருவ மழை அல்ல ! இந்த அரசு அதை எதிர் கொள்ளும் விதம்! இந்த அரசு என்பது மக்களை காக்க வல்லாத அரசு. முற்றும் செயல் இழந்து விட்ட ஒரு அரசினால் மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். இந்த அரசின் கையாலாகாதனம் முடிச்சூர், தாம்பரம் உட்பட சென்னையின் புற நகர் முழுவதும் தெரிகிறது.
வழக்கம் போல இந்த வருடமும் வெள்ளத்துக்கு படகுகளிலிருந்து, உணவுவரை தயாராக இருக்கிறது. ஆனால், ஒரு தடவைகூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் தூர்வாரப்பட்டு தயாராக இருப்பதேயில்லை. அதன் ரகசியம் என்ன ? சிதம்பர ரகசியமா இல்லை பழனிசாமி ரகசியமா?