சென்னையில் மாரத்தான் போட்டி: நாளை போக்குவரத்து மாற்றம்

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (13:12 IST)
சென்னையில் மாரத்தான் போட்டி: நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை காவல்துறை மத்திய கைலாசத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ள 
 
மேலும் காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை மற்றும் சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்