அதிமுகவின் ஈரோடு தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (13:48 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என அதிமுக தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாகவும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்றும் தேர்தல் பணிக்கு 49 சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது 
 
அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 20 ஆம் தேதிக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்