சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த முறையீடு நிராகரிக்கப்பட்டது.
விரைந்து விசாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இதை மனுவாக பதிவு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம் நடக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழக்கின் முடிவில் தான் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெறுமா என்பது தெரியவரும்.