ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

Mahendran

திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (13:32 IST)
தமிழக பகுஜன் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் அவர்களில் திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் திருமலை தான் ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவலை கொலை கும்பலுக்கு கொடுத்தவர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமலைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. முழுமையாக அவர் குணம் அடைந்தவுடன் மீண்டும் பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்