ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி! – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (13:04 IST)
தமிழகத்தில் பிரபலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக மத்திய அரசால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி மீண்டும் அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னை நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் “தமிழகத்தில் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை தவிர்த்து வெளிநாட்டு மாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது” என தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்