தமிழ்நாட்டுல மொத்தமே 16 டோல்கேட்தான்! - வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (12:00 IST)
தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்குள் இருந்த சுங்கச்சாவடிகள் மூடப்பட்ட நிலையில் மேலும் சில சுங்கசாவடிகள் மூடப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 சுங்க சாவடிகள் சமீபத்தில் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு ”தமிழ்நாட்டில் மொத்தமே 16 சுங்கசாவடிகள்தான் செயல்பட வேண்டும். ஆனால் 48 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. 32 சுங்க சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்துவோம்” என கூறியுள்ளார்.

சுங்கசாவடிகள் குறைக்கப்படும் நடவடிக்கை வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்