மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (11:39 IST)
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதுடன், பள்ளியும் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரேதபரிசோதனையின்போது மாணவியின் தந்தை மற்றும் அவரது வக்கீல் உடன் இருக்கலாம் என்றும், பிரேதபரிசோதனையை வீடியோ பதிவாக எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்