வீட்டு விநாயகர் சிலைகளை மட்டும் கரைக்க அனுமதி! - சென்னை உயர்நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (13:10 IST)
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைப்பது குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைக்க மற்றும் ஊர்வலம் செல்ல தமிழக அரசு தடை விதித்த நிலையில், விதிக்கப்பட்ட தடையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளதா என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

உயர்நீதிமன்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசின் பதிலை ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை மெரினா கடல் தவிர்த்து அருகில் உள்ள ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் தனிமனிதர்கள் சென்று கரைக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக்கொள்ள அனுமதித்துள்ள நிலையில், அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்