ஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (14:47 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு இன்னும் ஏன் மனநல சிகிச்சை செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
ஹெச்.ராஜா வன்முறை துண்டும் விதமாக எப்போதும் பேசி வருவதாக அவர் மீது சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மனநலபாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதால் அவருக்கு மனநல பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹெச்.ராஜாவிற்கு மனநல பிரச்சனை இருந்தால் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அம்பத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
 
ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஹெச்.ராஜாவை மனநல சோதனைக்கு உட்படுத்தினீர்களா என அம்பத்தூர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், இதுகுறித்து வருகிற 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கெடுவும் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்