செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (11:51 IST)
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நீதிபதி அல்லி ஏற்று கொண்டார்.
 
மேலும் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த மனு மீண்டும் வரும் வெள்ளி அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்