வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டு வாங்க ஏற்பாடு! – சென்னை மாநகராட்சி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (09:01 IST)
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தபால் ஓட்டுகளை வீடுகளுக்கே சென்று பெற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டுகளுக்கு விண்ணப்பித்தோர் இன்று முதல் வாக்கு செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டோர் உள்ளதால் அவர்களின் இருப்பிடம் சென்று தபால் ஓட்டுகளை பெற குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 70 பேர் கொண்ட குழு 7,300 தபால் ஓட்டுகளை வீடுகளுக்கே சென்று பெற உள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு 15 நபர்களிடன் தபால் ஓட்டுகளை பெற உள்ளதாகவும், ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்