சூடுபிடித்த வியாபாரம், காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்! – குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:10 IST)
சென்னையில் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் அதிகமாக சேர்ந்ததாக பிரபல துணிக்கடைக்கு சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கொரோனா காரணமாக சென்னையில் கடந்த சில மாதங்களாக கடும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் குறைவான அளவிலேயே வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழாக்காலம் நெருங்கி வருவதால் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் கடைகளில் கூடுவதால் சமூக இடைவெளி கேள்விக்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் உள்ள குமரன் சில்க்ஸில் மக்கள் பலர் துணி வாங்க குவிந்ததால் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. இதைபற்றிய வீடியோ வெளியான நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் குமரன் சில்க்ஸ் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் சக கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்