சென்னை விசா மையத்திற்கு வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் சுகாதாரத்துறை

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (07:43 IST)
சென்னை விசா மையத்திற்கு கடந்த 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த தேதியில் விசா மையத்திற்கு வந்த அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதால் அன்றைய தேதியில் சென்னை விசா மையத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை விசா மையத்தின் முகவரிக்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்திற்கு அதே நாளில் அதாவது மார்ச் 15ஆம் தேதி சென்று வந்த அனைவரும் வீட்டிற்குள்ளேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், உங்கள் விபரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள் தயவுசெய்து இந்த தகவலை பரவலாக பகிருங்கள் என்றும், அந்த இடத்திற்கு அதே நாளில் சென்ற அனைவருக்கும் இதை தெரியப்படுத்தவும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு நேற்று இரவு வெளியான நிலையில் இன்னும் யாரும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ளவில்லை என்றும் இருப்பினும் இன்று இதுகுறித்த தகவல் தெரிய வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை விசா மையத்திற்கு வந்தவருக்கு கொரோனா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்