பன்னீர் பட்டர் மசாலா வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!
பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்காததால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் என்ற பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாரிடம் பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்
ஆனால் அவரது தாய் வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த கல்லூரி மாணவி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது