விருப்பமில்லாத திருமணம்: நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபரீத முடிவு

வெள்ளி, 11 மார்ச் 2022 (10:42 IST)
விருப்பமில்லாத திருமணத்தால் புதுமணப் பெண் நான்கே நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் சந்தியா. பி.காம் படித்துள்ள இவருக்கு கடந்த மார்ச் 4 ஆம் தேதி ராஜா என்பவருடன் சேலத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் கொரட்டூர் திரும்பினர். இந்நிலையில் மார்ச் 7 ஆம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். 
 
அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் சந்தியாவுக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடந்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.  மேலும் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்