சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?
சிவப்பு அரிசி கொள்முதலை தமிழக அரசு கைவிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி.கே.எம்.9 என்ற நெல்லினை அரவை செய்வதால் கிடைக்கும் சிவப்பு அரிசி சற்று பருமனாக உள்ளது என்பதும் இதனால் மக்கள் அந்த அரிசியை பெரும்பாலும் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிரது.
இதனை அடுத்து சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
சிவப்பு அரிசியை மக்கள் பணம் வாங்குவதில்லை என்பதால் அந்த அரசியை கொள்முதல் செய்வதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது