ரசாயனம் கலந்து விற்கப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல்! மீன்வளத் துறை நடவடிக்கை

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (13:02 IST)
ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்ட 300 கிலோ மீன்களை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேனி மற்றும் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்படும் மீன்கள் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன
 
இந்த புகாரை அடுத்து மீன்வளத் துறையினர் மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் அதிரடியாக தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் சோதனை செய்தனர் 
 
அப்போது தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரசாயனம் கலந்து விற்பனை செய்த மீன் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்