ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு உள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்க கோரி முன்னதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.