குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தும் நீங்கள்! - சாருஹசன் விளாசல்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (15:52 IST)
ஆளும் அதிமுக அரசு பற்றி நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் அதிரடியான சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கமல்ஹாசனின் சகோதரரான நடிகர் சாருஹாசன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுக்கு…. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்…? குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்… கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்..


 

 
ஒன்று புரிகிறது. அதிமுகவில் ஜெயகுமார் ஒருவர்தான் இதுவரை லஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது.... ஆனால் உழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில ரெய்டு, பிரபல காண்ட்ரக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட் .. நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு, சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை. ?
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்