தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புதன், 8 நவம்பர் 2023 (19:24 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 28   மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘’அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதரபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுரை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ‘’தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்