சென்னையில் திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. பெரும் பரபரப்பு..!

புதன், 8 நவம்பர் 2023 (07:20 IST)
சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ சோதனை செய்து வருகிறது. இந்த சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்