சென்னையில் சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவித்த முதல்வர் பழனிசாமி !

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (16:52 IST)
சென்னையில் கொரோனா பரவலை  தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில்,  மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என அறிவித்துளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையில், ஜூன் 7 முதல் காய்கறி கடைகள்,  காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என அறிவித்துள்ளார்.

டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்; சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  மால்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் அனைத்தும்  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்