தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல்: 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:33 IST)
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கைதான 2 பேருக்கு இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
சம்பவ இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கைதான இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார்  நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 6ஆம் தேதி இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விவகாரத்தில் சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்