அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

Siva

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (17:39 IST)
இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால், ரூ.1000 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து  இறால் வளர்ப்பு நிபுணர்கள் கூறும்போது, ‘எங்கள் உழைப்பு வீணாகி கொண்டிருக்கிறது. அமெரிக்காவிடம் கெஞ்சி ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, இறாலை நாமே சாப்பிடலாம். உள்நாட்டு சந்தையை மேம்படுத்த அரசு உதவ வேண்டும்," என்று கூறுகின்றனர்.
 
இறால் ஏற்றுமதி மீதான சுமையை குறைக்க, இறால் வளர்ப்பு தொழில் நிபுணர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி  இறால் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கினால், உள்நாட்டில் இறால் விலை குறையும். இதனால், பொதுமக்கள் எளிதாக வாங்க முடியும், இதன் மூலம் உள்நாட்டுச் சந்தை வலுப்பெறும்.
 
அரசு, உள்நாட்டுச் சந்தை மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து, மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும். உள்நாட்டுச் சந்தையை மேம்படுத்துவதன் மூலமே, இந்த சவாலைச் சமாளிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். 
 
இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து, மீனவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்