கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி.. கோவில்பட்டி இளைஞரை கைது செய்த போலீஸ்..!

Siva

திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:41 IST)
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் பத்து கோடி ரூபாய் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட கோயில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பணம் கொடுத்து மதமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்து மதத்தில் இருந்து விலகி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் 10 கோடி தருவதாக சொக்கநாதன் என்பவரிடம் கூறியுள்ளார்

மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் ஒரே அதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில் திடீரென அந்த இளைஞர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் இதையடுத்து தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த சொக்கநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிகிறது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி செய்த நபரை தேடி வந்த நிலையில் அவரை நேற்று கைது செய்துள்ளது. அவரது பெயர் ராஜவேல் என்றும் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இது போல் பலரிடம் மதமாற்றம் செய்வதாக கூறி பண மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்