காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடும் தேதி அறிவிப்பு.. தமிழகத்திற்கு தண்ணிர் கிடைக்குமா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:46 IST)
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12-ஆம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணிர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம், இக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அவர்களின் தலைமையில் அக்டோபர் 12-ஆம் தேதி கூடவுள்ளது.
 
கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது
 
ஆனால் 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், வரும் 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க மீண்டும் உத்தரவிடப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்