சீமான் மீது வழக்குப் பதிவு

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (08:12 IST)
சீமான்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கிண்டி காமராஜ் நினைவு மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது “உள்நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புதல், இரு பிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்