சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த ஹோட்டல் தொழிலாளி; கைது செய்த போலீஸார்

Arun Prasath

புதன், 12 பிப்ரவரி 2020 (18:23 IST)
கோப்புப்படம்

சிறார் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நாமக்கலைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறார் ஆபாசப் படங்களை பகிர்பவர்கள் பலரையும் போலீஸார் கைது செய்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் மாரப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி என்பவர் சமூக வலைத்தளங்களில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னையில் தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். விடுமுறைக்காக மாரப்பம்பாளையத்திற்கு சென்ற குருசாமி, போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்