ஓபிஎஸ் உள்ளிட்ட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:29 IST)
சட்டசபை முன் இன்று தர்ணா போராட்டம் செய்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் உள்பட 63 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
இன்று காலை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 63 அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கக் கூடாது என்று இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் அரசின் உத்தரவை மதிக்காமல் உள்பட 3 பிரிவுகளில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 63 அதிமுக எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்