அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (18:14 IST)
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் நிறைவடைந்த நிலையில் இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து என்ற பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது 
 
இதனை அடுத்து 9 காளைகளை அடக்கிய கருப்பண்ணன் என்பவர் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். 8 காளைகளை அடக்கிய சக்தி என்பவருக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் குருவி துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொரோனா விதி முறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. 719 காளைகள் இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன என்பது 700 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று 52 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பதும், அவர்கள் அனைவரும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்