மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை?

வெள்ளி, 15 ஜனவரி 2021 (10:30 IST)
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல். 

 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் போது மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் நேற்று மதுரை அவனியாபுரத்தில் வெகுசிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 
 
இதனை அடுத்து இன்று மதுரை பாலமேட்டில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை இன்று காலை 8 மணிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 
 
முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அதற்கான முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்