மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார்.. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமின் பதிவு வைரல்..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (06:28 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்தார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த  உரையை வாசித்த நிலையில் கடைசியாக இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி சில பொய்யான தகவல் உரையில் இருப்பதால் தான் வாசிக்கவில்லை என்று கூறிவிட்டு ஜெய் பாரத் ஜெய் ஹிந்த் என்று கூறிவிட்டு வெளியேறினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.  இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் ’மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார், உங்களது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.  இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்