மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு: இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (15:35 IST)
சென்னை, வேளச்சேரியில்  உள்ள கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டனி, எக்கனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதுபற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்