மதுரை அதிமுக மாநாட்டில் ருசியில்லாத உணவு.... டக் கணக்கில் வீண்

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (14:11 IST)
அதிமுக மாநாட்டில் உணவுகள் வீணாகிக் கொட்டப்பட்டுள்ள சம்பவத்திற்கு விமர்சனம் எழுந்துள்ளது.
 
மதுரையில்  நேற்று  அதிமுக மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர்.

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், நேறைய மாநாட்டில் தயாரான உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டுத் திடலில் கொட்டப்பட்டுள்ளன.

மாநாட்டு  மைதானத்தில் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அங்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும்,  உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டக் கணக்கில் உணவு அந்த திடலில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அதிமுக மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகும்  நிலையில் அவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுத்திருந்தால்  உணவு தட்டுப்பாடே ஏற்பட்டிருக்கும்… ஆனால் உணவு சரியில்லாததால் அவர்கள் புளியோதரையை சாப்பிடவில்லை என தெரிகிறது.

அதிமுக மாநாட்டில் உணவு வீணாகிக் கொட்டப்பட்டுள்ள சம்பவத்திற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்