சென்னை விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறக்கப்பட்ட பயணிகள்..!

Siva
திங்கள், 3 ஜூன் 2024 (10:49 IST)
சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் இருந்து கிளம்ப தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்று காலை விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்த நிலையில் திடீரென அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

இதனை அடுத்து விமானத்தில் இருந்த 182 பயணிகள் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இதனை அடுத்து விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை விமான நிலையத்திற்கும், அதன் பின் ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் இருந்து கிளம்ப இருக்கும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்