பத்ம விபூஷண் விருது பெற்ற ரகுநாத் மகபத்ரா வடிவமைக்கவுள்ள இந்த கோவிலுக்கான புளுபிரிண்ட் தயாராகிவிட்டதாகவும், இந்த கோவில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ ஜெகன்னாதர் மற்றும் கோனார்க்கில் உள்ள சூரிய கோவில் ஆகியவற்றை வடிவமைத்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை குடும்பத்தினை சேர்ந்தவர் தான் இந்த கோவிலுக்கு வடிவமைத்த ரகுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.