சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Mahendran
சனி, 15 ஜூன் 2024 (16:03 IST)
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு விமான நிலையம் முழுதும் சோதனை செய்யப்பட்டதில் அது வதந்தி என்று தெரிய வந்தது. 
 
அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பெற்றோர்கள் அவசர அவசரமாக தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர் என்பதும் இதுவும் வெறும் வதந்தி என்பதும் தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளளது. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பேசிவிட்டு தொடர்பை மர்ம நபர் துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்