நான் சொன்னதை தெளிவா படிங்கப்பா! – சர்ச்சைக்கு நயினார் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:15 IST)
பாஜக மீது நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருப்பதாக சர்ச்சைகள் உண்டான நிலையில் அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தொண்டர்கள், கட்சி செயல்பாடு குறித்து சமீபத்தில் தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக மீது அவர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ள நயினார் நாகேந்திரன் ” வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு !!” என்று கூறியுள்ளார்.

மேலும் “நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும் !! என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது !!” என்றும் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்