ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத திராவிட கட்சிகள்: பாஜகவின் பக்கா பிளான்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (22:15 IST)
தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் தலைமை ஓய்ந்துவிட்டது. இதனை காரணமாக வைத்து சிறிய கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கையில் அமித்ஷாவின் பக்கா பிளான் ஆரம்பமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி வைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்களில் அழகிரி, கனிமொழி ஆகியோர் உள்ளனர். இதேபோல் திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை பாஜக தலைமை அனுப்பியுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அணுகி சில கருத்துக்களை பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது உறுதியான பின்னர் திமுகவின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து கட்சிக்கு எதிராக வேலை செய்யும் வகையில் தூண்டி நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. கருணாநிதி இதுபோன்ற சிக்கல்களை தனது சாணக்யத்தனத்தால் பலமுறை வெற்றிகரமாக சமாளித்துள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலினும் தந்தை வழியில் சவால்களை முறியடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்