கருணாநிதி சிலை திடீர் அகற்றம்: வேலூரில் பரபரப்பு

வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (19:54 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய நினைவிடத்தில் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் இரவுபகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கருணாநிதிக்கு புதியதாக வைக்கப்பட்ட சிலை ஒன்று திடீரென அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேலூர் அருகே நடந்துள்ளது.
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி, விநாயகர் புரம் நெடுஞ்சாலையில், கருணாநிதியின் மார்பளவு சிலையை வைத்து அதற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் இந்த சிலை அனுமதி இல்லாமல் அவர் வைத்ததாக வந்த தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலையை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் சிலையை வைக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்