தமிழகத்தில் அடுத்த ஆட்சியில் தாமரை மலரும்: பாஜகவின் பக்கா பிளான்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (12:49 IST)
தமிழகத்தில் அடுத்த ஆட்சியில் தாமரையை மலர செய்தே ஆக வேண்டும் என்று பக்காவாக திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது பாஜக.

இந்திய தேசியத்தில் பாஜகவுக்கு கிடைத்த செல்வாக்கு தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக செல்லாக் காசாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி நீடிப்பதால் அதை வைத்து மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது. போன மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஒரு இடம் கூட வெற்றிபெறாத பாஜக இந்த தேர்தலில் மம்தாவுக்கு கிட்டதட்ட சரிசமமான எதிரியாக மாறியிருப்பதே பெரிய உதாரணம்.

மேலும் பல மாநிலங்களில் முக்கிய மாநில கட்சிகளில் இருப்போர் பலர் பாஜகவுக்கு மாறி வருகின்றனர். ஆந்திராவிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியிலிருந்து பலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். இந்தியா எங்கும் உள்ள அரசியல்வாதிகளிடையே பாஜக ஆசை பரவி வருகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதாலும், மக்களிடையே மோடி பிரம்மாண்ட நாயகனாக இருப்பதாலும், நல்ல பதவிகள் கிடைக்கும் என பலர் பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.

இந்த கட்சி தாவலுக்கு தமிழகமும் தப்பவில்லை. கட்சி தாவுதல் தமிழக அரசியலில் புதியதும் அல்ல. வைகோ, திருமா போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோடு கூட்டணி அமைப்பது போல பல அரசியல்வாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவார்கள். ஆனால் எப்படி தாவினாலும் அது அதிமுக, திமுக என்ற இருபெறும் மாநில கட்சிகளுக்குள்தான் இருக்கும். எத்தனை நாள் குட்டையை தாண்டுவது இந்த தடவை கடலுக்கு தாண்டுவோம் என முடிவெடுத்துவிட்டனர் பல அரசியல்வாதிகள்.

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல்கள் எழுந்துள்ள நிலையில், என்றோ அம்மா என்னை அடித்துவிட்டார் என ராஜ்யசபாவில் கண்ணை கசக்கி நின்ற சசிகலா புஷ்பா இன்று ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாங்கிய பல்பை வைத்து சட்டசபையை பயத்தோடு எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர்களின் கரங்களை பற்றி பாஜகவுக்கு இழுத்து கொண்டிருக்கிறாராம்.

பாஜகவுக்கு பலம் வாய்ந்த மாநில தலைமை இல்லாத நிலையில் மக்கள் செல்வாக்கு உள்ள மாநில அரசியல்வாதிகளை பாஜகவுக்குள் இழுத்து போட்டு கொண்டால் தீர்ந்தது பிரச்சினை என்பதுதான் பாஜக திட்டமாம். பாஜக வெறுப்பு அரசியல் பேசி வெற்றிபெற்று விடலாம் என்று ப்ளான் போட்டுள்ள திமுகவுக்கே ஸ்பெஷல் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறதாம் மத்திய பாஜக.

தனது திட்டத்தை அடுத்த தேர்தலுக்குள் நிறைவேற்றி பதவியை பிடிக்க பாஜக தீவிர களப்பணியில் இறங்கியிருக்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்