தமிழ் வளர்த்தது யார்? சும்மா இல்லாம கொளுத்தி போட்ட எச்.ராஜா!!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (13:06 IST)
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழ் வளர்த்தது யார்? டிவிட்டரில் ஒஉ பதிவை போட்டு திமுகவினரை சீண்டியுள்ளார். 
 
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். சும்மா இருக்காமல் தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் ஏதாவது பதிவிட்டு இணையவாசிகளிடன் வாங்கிக்கட்டிக்கொள்வார். அந்த வகையில் இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில்... 
 
தமிழ் வளர்த்தது யார்? தேவாரம்,திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம் பெரியபுராணம் ஆனால், இம்மாதிரியாக எந்த ஒரு படைப்புமில்லாமல் வேலைகாரி, ஓடிப்போனவள் போலீஸ்காரன் மகள், ஓரிரவு எழுதியவர்களெல்லாம் தமிழ் பக்தர்களா? என பதிவிட்டுள்ளார். 
 
இதனை கண்டு கடுப்பான இணையவாசிகள் அவரை தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.  இவை அனைத்தும் அண்ணா எழுதியவை என்பதால், குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் இதனால் கடுப்பாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்