போலீஸுக்கு எதிரான போராட்டம் வெகுஜன விரோத போராட்டம்: எச் ராஜா சொல்வது என்ன?

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (15:32 IST)
சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது எச் ராஜா கருத்து. 
 
அவர் கூறியுள்ளதாவது, சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும். 
காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாது வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை என்பது குறித்து உளவுத்துறை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
 
இச்சம்பவத்தை அமெரிக்க ப்ளாயிட் சம்பவத்துடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசவிரோத சீனக் கூலிகள் சீனாவின் செம்புக்கு இங்கு மார்க்கெட் உருவாக்க ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்ச்சில் மணியடித்து கலவரம் செய்ததை மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரு கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என தனது சமூகவலைத்தள பக்கத்தில் சாத்தான்குள்ம சம்பவம் குறித்த தனது கருத்தை விரிவாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்