சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் வியாபாரிகள் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் மர்மமாக மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி தற்போது அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் ராகுல் காந்தி உள்பட பல அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தங்களுடைய சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது