முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் பாஜக முடிச்சு: ப.சி காட்டம்!

சனி, 27 ஜூன் 2020 (13:29 IST)
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என ப சிதம்பரம் கேள்வி. 

 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சொ காலத்தில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்த பணத்தை ராஜிவ் அறக்கடளைக்கு நன்கொடயாக வழங்கி காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியதாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா குற்றம்சாட்டியதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பதில் அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ 20 லட்சம் பெற்றது உண்மைதான்.  ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது. இதில் என்ன தவறு?
 
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது! சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என கேள்வி எழுபியுள்ளார். 
 
காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இதன் உறுப்பினர்களாக மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்