பிரேமலதா விஜயகாந்தை திடீரென சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர்.. என்ன காரணம்?

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (12:49 IST)
பிரேமலதா விஜயகாந்தை திடீரென பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் சந்தித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அழைப்பை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கொடுத்ததாகவும் செய்தி வெளியானது.
 
அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாஜகவிடம் இருந்து தேமுதிகவுக்கு அழைப்பு வந்துள்ளது.
 
"என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நாளை மறுநாள் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்